ஜப்பானின் ஹிரோஷிமா பிராந்தியத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பாரிய
மண்சரிவில் சிக்கி குறைந்தது 32 பேர் பலியானதுடன் 9 பேர் காணாமல்
போயுள்ளனர்.
ஹிரோஷிமா நகருக்கு வெளியிலுள்ள மலைப் பிராந்தியமொன்றுக்கு அருகிலுள்ள
குடியிருப்புப் பிரதேசத்தில் அடை மழை காரணமாக இந்த மண்சரிவு
இடம்பெற்றுள்ளது.
பலியானவர்களில் 2 வயது பாலகன் ஒருவன் உள்ளடங்குகிறான். மண் சரிவில்
சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 53 வயது மீட்புப்
பணியாளர் ஒருவர் இரண்டாவதாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இன்று புதன்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கடும் மழை வீழ்ச்சியே இந்த மண் சரிவுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
