டெஸ்ட் போட்டிகளில் இன்று ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரரான மஹேல ஜயவர்தனவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டியுள்ளார்.இந்த டெஸ்ட் போட்டி இடம்பெற்ற எஸ்.எஸ்.சீ மைதானத்திற்கு ஜனாதிபதி இன்று நண்பகல் சென்றுள்ளார். இதன்போது போட்டி நிறைவடைந்தவுடன் ஜனாதிபதி, மஹேலவிற்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், சனத் ஜயசூரிய மற்றும் ஜே. ஸ்ரீரங்கா ஆகியோரும் சென்றிருந்தனர். அங்கு சமூகமளித்திருந்த பாகிஸ்தான் வீரா்களுடனும் ஜனாதிபதி அவா்கள் கை குழுக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. *(படங்கள்: சுதத் சில்வா)* நன்றி விடியல்*









