திருகோணமலை வெள்ளைமணல் கரிமலையூற்று பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில்
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி லால் பெரேராவை
சந்தித்து தான் முக்கிய பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் இந்தப் பள்ளியை
இரண்டு வார காலத்திற்குள் புனரமைத்து தருவதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும்
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீம் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார்.
கரிமலையூற்று பள்ளிவாயல் இராணுவத்தினரால் உடைக்கப்பட்டது தொடர்பாக
அறிந்தவுடன் இதன் உண்மை நிலையை அறிவதற்காக அதிஉயர் பாதுகாப்பு
வலயத்திற்குள் அமைந்துள்ள இப்பள்ளிவாசல் பிரதேசத்திற்கு உடனடியாக விஜயம்
செய்து பள்ளியைப் பார்வையிட்:டு உண்மை நிலையை அறிந்த பின்னர் கிழக்கு மாகாண
இராணுவத் தளபதி திருமலை மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவத்தளபதி மற்றும்
கரிமலை ஊற்று முகாமுக்கு பொறுப்பான இராணுவத் தளபதி ஆகியோர்களை அவரது
உத்தியோக பூர்வ வாசஸ்தளத்திற்கு அழைத்து பேச்சுவார்;த்தையை
நடத்தியுள்ளதுடன் முஸ்லிம்களின் மனநிலை குறித்து 400 வருடங்கள் பழமை
வாய்ந்த பள்ளியின் வரலாறு குறித்தும் படை உயர் அதிகாரிகளுக்கு
தெரிவுபடுத்தியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது இரண்டு வார காலத்திற்குள் இப்பள்ளியை புனரமைத்துத் தருவதாகவும் அரச மேல்மட்டத்திலிருந்து உத்தரவைப் பெற்றுத்தந்தால் பள்ளியில் நாளாந்த தொழுகையை நடாத்துவதற்கும் இராணுவம் வழிவகுத்துத் தரும் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவத் தளபதி முதலமைச்சரிடம் உறுதியளித்தார். எனவே இச்சம்பவம் குறித்து திருமலை மாவட்ட முஸ்லிம்கள் மனக்கிலோசம் கொள்ளத் தேவையில்லையெனவும் கிழக்கின் முதல்வர் என்ற வகையிலும் திருமலை மாவட்டத்தை பல ஆண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பிரதிநிதித்துவப்படுத்தியவன் என்ற வகையிலும் இவ்விவகாரத்தில் கரிசனையோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது 2007ஆம் ஆண்டு நிதி
ஒதுக்கீடு செய்து இப்பள்ளிவாயலை புனரமைப்புச் செய்து அப்பிரதேச மக்கள்
ஐந்து நேரத் தொழுகையிலும் ஈடுபட்டு வந்தனர். 2009 ஆம் ஆண்டு முதல் அதி உயர்
பாதுகாப்பு வலயத்தினுள் இப்பள்ளிவாசல் அமைந்துள்ள பிரதேசம்
உள்வாங்கப்பட்டதால் அன்றுமுதல் அப்பிரதேச மக்கள் அங்கு செல்வதற்கு
அனுமதிக்கப்படவில்லை.
இச்சம்பவத்தை பூதாகரமாக்கி இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும்
சக்திகள் குறித்து அனைவரும் விழிப்பாக இருக்கவேண்டியது அவசிய மானதென்றும்
முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தங்களது அரசியல் கனவு நிறைவேராத சிலர்
அரைவேட்காட்டு தனமாக அறிக்கைகளை விட்டு மக்களை குழப்புவது
வேதனையிளிக்கின்றது. இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட சிலர்
முயற்சித்து வருவதையும் மக்கள் உணர வேண்டும். இப்பள்ளிவாசலைப் புனரமைப்பது
அப்பிரதேச மக்களை ஐவேளைத் தொழுகைக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பது
முதலமைச்சர் என்ற வகையில் எனக்கு முக்கிய பொறுப்பு இருப்பதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளாா் (MN)
