Thursday, September 25, 2014

ஒக்டோபர் 1ஆம் திகதி சிறுவர், முதியவர்களுக்கு தெஹிவளை சரணாலய அனுமதி இலவசம்!

ஒக்டோபர் 01ம் திகதி வரும் உலக சிறுவர் தினம், முதியோர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை விலங்குகள் சரணாலயம் மற்றும் பின்னவல யானைகள் சரணாலயம் என்பவற்றில் விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

12 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் மற்றும் 60 வயதிற்கும் அதிகமான முதியவர்களுக்காக இந்த விசேட செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விலங்குகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் மேற்கூறிய வயதுடையோர் தெஹிவளை விலங்குகள் சரணாலயம் மற்றும் பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு இலவசமாக உள்நுழைய முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Disqus Comments