Thursday, September 25, 2014

புத்தளத்தில் எயிட்ஸ் தீவிரம்! எட்டு மாதத்தில் 12 நோயாளிகள்

புத்தளம் பிரதேசத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த எட்டு மாத காலத்துக்குள் புத்தளம் பகுதியில் இருந்து 12 எயிட்ஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு்ள்ளனர். அவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

கடந்த ஆண்டு முழுவதுக்குமான காலப்பகுதியில் புத்தளம் பிரதேசத்தில் இருந்து ஐந்து எயிட்ஸ் நோயாளிகள் மட்டுமே கண்டறியப்பட்டிருந்தனர். எனினும் இந்த ஆண்டு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே இந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதிலும் இருந்து சுமார் இரண்டாயிரம் எயிட்ஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
(TamilWin)
Disqus Comments