Friday, September 26, 2014

11 வயது மாணவன் மீது துஷ்பிரயோகம்; பாடசாலை அதிபர் கைது

11 வயது பாடசாலை மாணவனொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய அப்பாடசாலையின் அதிபரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று, தலைமன்னார், கட்டுக்காரன் குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன், தற்போது மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தலைமன்னார் கட்டுக்காரன் குடியிறுப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கல்வி பயின்று வந்த 11 வயது மாணவனொருவரை, கடந்த செவ்வாய்க்கிழமை (23), பாடசாலையின் களஞ்சியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ள பாடசாலையின் அதிபர், அம்மாணவனின் சீருடைகளைக் களைந்து துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், குறித்த மாணவனின் பெற்றோர், தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்ததை அடுத்து, நேற்று வியாழக்கிழமை, மேற்படி பாடசாலையின் அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரான அதிபரை இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Disqus Comments