Thursday, September 11, 2014

8 வயது சிறுமி முதல் 80 வயது கிழவி வரையுள்ள பெண்கள் கற்பழிக்கப்படும் உலகில் நாம் வாழ்கின்றோம். (அவசியம் வாசியுங்கள்.)



மீடியாவுடன் தொடா்பான எந்த மனிதனாக இருந்தாலும் அது எந்த வகையான மீடியாவின் வடிவமாக இருந்தாலும் சரி, குறைந்தது ஒரு நாளைக்கு 10 மரணச் செய்திகளை கேட்க முடிகின்றது. தற்கொலை, கொலை, கற்பழிப்பின் பின் கொலை, கொள்ளைக்காக கொலை, கொலையைக் கண்டமைக்காக கொலை என மணித உயிரைப் பறிக்கும் மாபாதக செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது

நேற்று மாலை முதல் அனைத்து மீடியாவையும் உலுக்கிய சம்பவம் தான், காத்தான்குடி - மஞ்சந்தொடுவாய் குவைட் சிட்டி பகுதியில் சஹாப்தீன் பாத்திமா சீமா எனும் 8  சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம். நேற்று வரை கொலை செய்யப்பட்டார் என்டு அறியப்பட்ட சம்பவம் இன்று காலை வெளியான மருத்துவ அறிக்கைகளின் பிரகாரம் கற்கழிக்கப்படுத்தான் பின்னா் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அவா்கள் கைதும் செய்யப்பட்டுள்ளார். 

இதுபோல தான் கடந்த மே மாதம் 10ம் திகதி அலவத்தகொடை- ரம்புல் எல என்னும் இடத்தில் 80 வயது முஸ்லிம் மூதாட்டி ஒருவா் சரமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கண்டு பிடிக்கப்பட்டார். அதாவது கொல்பவா் நான் ஏன் கொல்கின்றேன் என்பது தெரியாமலும் கொல்லப்படுகின்றவா் நான் ஏன் கொல்லப்படுகின்றேன் என்று தெரியாமலும் இருக்கும் வகையில் கொலைகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. 

அது மட்டுமல்லாமல் மூன்று வாரங்களுக்கு முன்பு வாழைச்சேனை இரண்டு ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சோ்ந்து ஒரு  குடும்பஸ்தரை அடித்துக் கொலை செய்த சம்பவம் வாழச்சோனையில் இடம்பெற்றது. 

சுமார் 8 மாதங்களுக்கு முன்பு தன் காதலுடன் சோ்ந்து பெற்று வளா்த்து ஆளாக்கிய பெற்றோரையே கொலை செய்ய மட்டக்களப்பு இரட்டைக் கொலைச் சம்பவம் கூட இங்கு நினைவு கூறத்தக்கது. 

இதுபோன்று அண்மையில் இடம்பெற்ற கொலை தொடா்பான நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போக முடியும். 

மனித உயிர்கள் துச்சமாக மதிக்கப்படுவதும், தவறு செய்தால் தண்டைகிடைக்கும் என்ற நம்பிக்கையும் பிரதான காரணங்களாக இருந்தாலும் காமம், பொருளாதாரம், கடன், தேவையற்று சண்டை சச்சரவுகள், வீண்வம்புச் சண்டைகள், போதை, வாழ்க்கையில் வெறுப்பு, அழுத்தம் போன்றவைகளை கிளைக்காரணங்களாக கூறமுடியும். 

நேற்றைய காத்தான் குடி நிகழ்வின் பின்னா்
நேற்றிலிருந்து இன்றுவரைக்கும் பல தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை வெளியில் அனுப்புவதற்கு பயப்படுகின்றனர். ஆண் உதவியில்லாத தாய்மார்கள் சிறுமிகளை கடைக்கனுப்பி பொருட்கள் வாங்குவதை தவிர்த்துவிட்டனர்.
வீட்டு முற்றத்திலும், வீதியிலும் விளையாடிய சிறுமிகள் வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
குற்றவாளி எவனாக இருந்தாலும் சட்டத்தின் முன் கைதுசெய்யப்பட்டு அதிகபட்ச தண்டணை வழங்கப்பட வேண்டும்.

சட்டத்தின் இருட்டறைக்குள் பலியான சிறுமியின் சம்பவம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டால், காத்தான்குடி சமூகம் தோற்றுப் போய்விட்டது என்றே அர்த்தம்.

கொலையாளி கைது செய்யப்படாமல் தாமதமாகும்பட்சத்தில் நாளை இதுபோன்று இன்னும் பல மொட்டுக்கள் துளிர்விடும்போதே கசக்கிப் புழிந்து புதைக்கப்படும் பரிதாபம் எமது ஊரில் ஏற்படும் ஆபத்துக்கள் இருக்கின்றன.” என காத்தான்குடி இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

கொலையாளி கைது செய்து அவனுக்கு உரிய தண்டணை இச்சமூகத்துக்கு முன் வழங்கப்படும் வரை ஈமான் உணர்வுள்ள அத்தனை இதயங்களும் போராட வேண்டும். 

இப்படிப்பட்ட கொலைகள் அதிகரித்துள்ளமை மறுமை அண்மித்து விட்டது என்பதையே காட்டுகின்றது. 

மறுமை தொடா்பாக நபியவா்கள் கூறும்போது
1.   கல்வி பறிக்கப்படும் வரை
2.   பூகம்பங்கள் அதிகமானும் வரை
3.   காலங் சுருங்கும் வரை
4.   குழப்பங்கள் தோன்றும் வரை
5.  கொலை செய்தல் அதிமானும் வரை
6.   உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை மறுமை நாள் ஏற்படாது.
புகாரி – 1036
????



Disqus Comments