Tuesday, September 2, 2014

இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பு ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் குறித்த கோரிக்கைகளில் சில தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மற்றைய கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறியுள்ளார்.
Disqus Comments