Tuesday, October 7, 2014

2015ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஒக்டோபர் 24ஆம் திகதி

2015ஆம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் முக்கிய பேச்சாளர் ஒருவர் அத தெரணவிற்கு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளதால் முன்கூட்டியே வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

வரவு - செலவுத் திட்ட வரைபு முன்மொழிவு பிரேரணை பிரதமர் டி.எம்.ஜயரட்னவால் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.

அதன்படி 2014ஆம் நிதியாண்டைவிட 2015ஆம் நிதியாண்டில் அரசாங்கத்தின் செலவு 17% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில் அரசாங்கத்தில் செலவு தொகை 2599 பில்லியனாக இருக்கும் நிலையில் 2015ஆம் ஆண்டு 3053 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2015ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் செலவு 450 பில்லியனால் அதிகரித்துள்ளது
Disqus Comments