தென்கொரியாவில் நடைபெற்ற 7ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்ற இலங்கை வீரர்களில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
ஹொக்கி அணி வீரர் மற்றும் கடற்கரை கரப்பந்து வீரர் ஆகியோரையே காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியாவில் நடைபெற்ற 7ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து 80 வீரர்கள் சென்ற நிலையில் அதில் 78 பேரே நாடு திரும்பியுள்ளனர்.
தென்கொரியாவில் வேலை செய்யும் நோக்கில் இவர்கள் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு ஆடவர் கிரிக்கெட் அணி மூலம் ஒரு தங்கப் பதக்கமும் மகளிர் கிரிக்கெட் அணி மூலம் வெண்கலப் பதக்கமும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது