Sunday, October 12, 2014

2015ம் ஆண்டு நடைபெறும் தோ்தலில் பொது வேட்பாளர் நானே: ஜனாதிபதி

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் நானே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொல்காவெவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கட்சிகள் மாத்திரமன்றி பொதுமக்களும் என்னுடன் இணைந்தே உள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், பொது வேட்பாளர் நானே தவிர வேறு யாரும் அல்ல. இந்த தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கன் தனி வேட்பாளர்களே ஆவர் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்
Disqus Comments