Saturday, October 11, 2014

2014ம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த புழுதிவயல் மாணவி


கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான புலமைப் பரிசில் பரிட்சை முடிவுகளின் படி புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலய மாணவி செல்வி ளS.H.ஹஸானா பேகம்   166 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். புழுதிவயல் முஸ்லிம்  வித்தியாலயத்தில் தோற்றிய மாணவா்கள் குறித்த மாணவி மட்டுமே சித்தி பெற்றுள்ளதோடு இவா் புத்தளம் மாவட்டத்தில் 51வது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

புழுதிவயலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவா் புழுவயலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட M.H.M சியாஉல், H.L. சஸீனா அவா்களின் செல்வப் புதல்வியாவார்.  1936ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புழுதிவயல் பாடசாலையில் புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்தவா்கள் வரிசையில் 9ம் இடத்தைப் பெற்றுள்ளார். இதற்கு 8 போ் மட்டுமே இதுகால வரைக்கும் சித்தியடைந்துள்ளனா்.



(எமது ரெட்பானா செய்திகள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேற்படி தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் சில தடைகள் இருந்தமையினால் தாமதமாக பிரசுரிக்கப்பட்டமையையிட்டு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.)
(படங்கள் A.M.Ruksan)

Disqus Comments