“மக்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட தபால்” என்பதே இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாகும்.
இன்றைய
சூழலில் நாம் தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், இணையம், சமூக வளைத்தளங்கள்
என நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். பேஸ்புக், ட்விட்டர், வட்ஸ்அப், என
விரல் நுனியில் தகவல்கள் பகிரப்பட்டாலும், விரலால் கடிதம் எழுதி தபால்
பெட்டிகளில் அனுப்பிய காலத்தை மறக்க முடியாது.
ஸ்காட்லாந்தில்
1712ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தபால் நிலையம்தான் உலகின் மொத்த தபால்
நிலையங்களுக்கும் தாய் வீடாகும். இன்றைக்கும் அந்த தபால் நிலையம் மக்கள்
சேவையாற்றி வருகிறது.
இன்றைக்கு உலகில் 8 இலட்சத்துக்கும் அதிகமான
தபால் நிலையங்கள் உள்ளன. உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக
இந்தியாவுள்ளது. கிட்டத்தட்ட 1.5 இலட்சம் தபால் நிலையங்கள் இந்தியாவில்
இயங்குகின்றன.
ஸ்விட்சர்லாந்து தலைநகரில் 1874ஆம் ஆண்டு அக்டோபர்
9ஆம் திகதி ‘சர்வதேச தபால் ஒன்றியம்’ தொடங்கப்பட்டது, அதன் பின்னர்
1969ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் திகதி உலக அஞ்சல் தினம் அறிவிக்கப்பட்டது.
உலக தபால் அமைப்பில், இலங்கை உள்ளிட்ட 150 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
விக்டோரிய
மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது தபால் முத்திரை,
1857ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்டது.
இதேவேளை, தபால் சேவை பாரியளவில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். அஞ்சல் தினத்தை முன்னிட்டு ,யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்
ஒன்லைனில் பரீட்சை கட்டணங்கள் செலுத்தும் முறைமையையும்
அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன மேலும்
குறிப்பிட்டார்.
