புத்தளம் மெல்லன்குளத்தில் மாணவியொருவர் கடத்திச்செல்லப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மெல்லன்குளம் உஸ்பிம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவியே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தனியார் வகுப்புக்குச் சென்று, நேற்று மதியம் 12.30க்கு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே குறித்த மாணவி கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
மாணவி பயணித்த வீதியிலிருந்த ஒருவரால் அந்த பகுதியிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பின்புறத்திற்கு கடத்திச்செல்லப்பட்டு, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.