திருகோணமலை மாவட்டத்தில் 15ற்கும் அதிகமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தை முன்னிட்டு, நாளையும், நாளை மறுதினம் பாடசாலைகள் மூடப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு படையினர் தங்குவதற்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, திருகோணமலை, கிண்ணியா, மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைகளுக்குப் பதிலாக எதிர்வரும் வாரஇறுதி நாட்களான நவம்பர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் பாடசாலைகள் நடைபெறும் எனவும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.