Monday, April 25, 2016

SLAS – SLEAS போட்டிப் பரிட்சை வழிகாட்டி – 12 இலங்கையின் உயா் கல்வி

இலங்கையில் உயா்கல்வி

·         கொழும்பு சட்டக் கல்லூரி 1875ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
·         அரசாங்கத்தின் முதலாவது தொழில் நுட்பக் கல்லூரி 1893ம் ஆண்டு மருதனையில் ஆரம்பிக்கப்பட்டது.
·         1921ல் லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக சிலோன் பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. (1972ல் கொழும்புப் பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்றது.
·         1942ல் பேராதெனிய பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
·         1973ல் ஜாமிஆ நளீமிய்யா ஆரம்பிக்கப்பட்டது. இது முஸ்லிம்களின் கல்வி வளா்ச்சிக்காக உருவாக்கப்பட்டது.
·         யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974ல் ஆரம்பிக்கப்பட்டது.
·         1978ம் ஆண்டு பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. தேசிய பல்கலைக்கழகங்களுக்கு மாணவா்களை அனுமதிக்க பொறுப்பாக இருப்பது இதன் பொறுப்பாகும்.
·         இலங்கை திறந்த பல்கலைக் கழகம் 1980ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
·         1981ம் ஆண்டு முதல் வசதி குறைந்த மாணவா்களுக்கு மஹாபொல புலமைப் பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை லலித் அத்துலத்முதலி உருவாக்கினார்.
·         2004ம் ஆண்டு முதல் உயா்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வந்த வருடமே மாணவா்களை பல்கலைக்கழகத்துக்கு அனுமதித்தல் எனும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.
·         இலங்கையின் தேசிய பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை – 15
·         பல்கலைக் கழகத்துக்கு மாணவா்கள் அனுமதிக்கும் போது க.பொ.த(உயா்தர) பரீட்சையில் பரீட்சாத்திகள் பெற்ற சராசரி ‘Z’ புள்ளி நிரலின் திறமை வரிசை அடிப்படையில் தெரிவு செய்யப்படுவா். மேலும் தீவளாவிய(நாடு தழுவிய) அடிப்படையில் ‘Z’ புள்ளிகளின் வரிசையில் 40%மான இடங்களும், மாவட்ட திறமை அடிப்படையில் ஒவ்வொரு கற்கை நெறிக்கும் 55% வரையிலான இடங்கள் மொத்த சனத்தொகை விகிதாசாரப்படி 25 நிர்வாக மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு கற்கை நெறிக்கும் உள்ள இடங்களில் 5% வரை விசேட ஒதுக்கீடாக கல்வியில் பின்தங்கிய 16 மாவட்டங்களுக்கு சனத்தொகை விகிதாசாரப்படி ஒதுக்கப்படும்.
Z புள்ளி கணிப்பீட்டு சமன்பாடு
     










Z  புள்ளி
x – குறிச்த பாடத்திற்கான பச்சைப்புள்ளி
X(Bar)– குறித்த பாடத்திற்கான இடைநிலைப்புள்ளி
s – குறித்த பாடத்திற்கான நியம விலகல்.

·         இலங்கையின் தேசிய பல்கலைக் கழங்களுக்கு தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு உயா்கல்வி அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இனைந்து நடாத்தும் தலைமைத்துவப் பயிற்சி 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
·         பல்கலைக் கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் முதல் பெண் தலைவா் – பேராசிரியை ஷனிகா ஷரிபுரேகம(8வது)
பல்கலைக் கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவவா் மொஹான் டீ சில்வ.
தேசிய பல்கலைக்கழகம் (15)
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
கொழும் பல்கலைக்கழகம்
1921
பேராதனைப் பல்கலைக்கழகம்
1942
ஸ்ரீ ஜெயவா்தன புர பல்கலைக்கழகம்
1959
களனிப் பல்கலைக்கழகம்
1959
மொரட்டுவைப் பல்கலைக்கழகம்
1972
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
1974
றுகுனு பல்கலைக்கழகம்ஹ
1984
திறந்த பல்கலைக்கழகம்
1978
கிழக்குப் பல்கலைக்கழகம்
1986
தென்கிழக்கு பல்கலைக்கழகம்
1996
ரஜரட்ட பல்கலைக்கழகம்
1995
சபரகமுவ பல்கலைக்கழகம்
1995
வயம்ப பல்கலைக்கழகம்
1999
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
2005
கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம்
2005

              
·         வளாகங்கள் (Campus)
1.       ஸ்ரீபாளி வளாகம்
2.       திருகோணமலை வளாகம்
3.       வவுனியா வளாகம்
பல்கலைக் கழக மாணிங்கள் ஆணைக்குழுவின் கீழ் வராத ஏனைய அரச பல்கலைக் கழகங்கள்.
1.       பாதுகாப்பு அமைச்சு – ஜெனரல் சோ். ஜோன். கொத்தலாவ பாதுகாப்பு பலைக்கலைக்கழகம்.
2.       உயா்கல்வியமைச்சு – இலங்கை பௌத்த, பாளி பல்கலைக்கழகம், புத்த சிறாவக்க பிக்கு பல்கலைக்கழகம்.
3.       இளைஞா் விவகார  மற்றும் திறன் அபிவிருத்து அமைச்சு – வாழ்க்கைத்  தொழில்சார், தொழில்நுட்பவியல் பல்கலைக் கழகம்.

·         இதுவரை காலமும் பல்கலைக் கழகத்துக்கு மாணவா்கள் எழுத்து முறையில் தான் தங்களது விண்ணப்பங்களை சமா்ப்பித்தனா். ஆனால் 2016ம் ஆண்டு முதல் இணைய வழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்கும் முறைமை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Disqus Comments