Monday, October 27, 2014

வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் வாகனங்களின் விலைகள் சடுதியாக குறைவு

வாகனங்களின் விலைகள் 25 வீதத்தினால் உடனடியாக குறைவதாக, இலங்கை திறைசேரியின் பிரதிச்செயலாளர் எஸ்.ஆர்.ஆர்டிக்கல தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தின்படி இந்த வாகன விலைக்குறைப்புக்கள் அமுலுக்கு வருகின்றன.
இயந்திர சக்திக்கு ஏற்ப இந்த விலைக்குறைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்படி 1000சிசி வாகனங்கள் 202 வீதத்தில் இருந்து 173 வீதம் வரை குறைகின்றன.
20 ஆசனங்களை கொண்ட வேன்கள் 100 வீதத்தினால் குறைகின்றன.
ஏனைய வாகனங்களின் விலைகளும் இயந்திர சக்திக்கு ஏற்ப குறைப்படுகின்றன
Disqus Comments