சிறு ஏற்றுமதிபயிர்கள் ஊக்குவிப்பு பிரதியமைச்சரான நிஸாந்த முத்துஹெட்டிகம, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வதுருவ சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையியேயே அவர், கடந்த 26ஆம் திகதி விசேட விருந்தினர்கள் பயணிக்கும் வாயிலின் ஊடாக சிங்கபூருக்கு பயணமானார். -