ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளரும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சருமான பைஸர் முஸ்தபா, மைத்திரிப்பால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக இன்ற அறிவித்தார்.
கடந்த 26ஆம் திகதி சிங்கபூருக்கு விஜயம் செய்திருந்த முதலீட்டு ஊக்குவிப்பு
பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, இன்று திங்கட்கிழமை அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் பைஸர் முஸ்தபா சந்தித்து, தனது ஆதரவினை வழங்கிக் கொண்டார்.
இதன்போது யங் ஏசியா தொலைகாட்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்ற அதிகாரி ஹில்மி அஹமதும் கலந்துகொண்டார்.