Sunday, January 11, 2015

அதவுல்லாஹ், எஸ்.பி உட்பட 16 முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் 16 பேர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர்களான நிமல் சிரிபால டி சில்வா, ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, அதவுல்லாஹ், எஸ்.பி. திஸாநாயக்க, கெஹெலிய ரம்புக்வெல்ல, டிலான் பெரேரா, மஹிந்தானந்த அலுத்கமகே, மேர்வின் சில்வா, ரெஜிநோல்ட் குரே ஆகியோர் உட்பட மற்றும் பல அமைச்சர்களின், பிரதியமைச்சர்களின்  தொகுதிகள் இதில் அடங்குகின்றன.
Disqus Comments