இம்முறை உலகக்கிண்ணத்தை இவர்கள்தான் வெல்வார்கள் என்ற அதிக நம்பிக்கையுடைய அணியாக வந்து, இவர்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று சொல்லுமளவுக்கு இறுதிப் போட்டி பக்கமே பார்க்காமல் வெளியே சென்று விடுவார்கள் தென் ஆபிரிக்கா அணியினர். இம்முறையும் அதே நிலைமைதான். அணியின் சமநிலை, வீரர்களின் நிலைமை என்பனவற்றை வைத்துப் பார்க்கும் போது இந்த அணி இலகுவாக இந்த தொடரைக் கைப்பற்றும் என்றே கூற முடியும். ஆனாலும் எந்த விமர்சகரும் இந்த அணியை நம்பி அப்படி ஒரு கருத்தை முன்வைக்க மாட்டார்கள்.
அவர்களின் ஆரம்ப நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக், முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத நிலை இருந்தும் அணியில் இணைத்துள்ளனர். அவரின் அதிரடி ஆரம்பம் தென் ஆபிரிக்கா அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும். முதல் இரண்டு போட்டிகளிலும் AB DE வில்லியர்ஸ் விக்கெட் காப்பில் ஈடுபட, ரிலி ரொசொவ் அல்லது பர்ஹான் பெஹைர்டீன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளனர்.
உபாதை காரணமாக அண்மையில் போட்டிகளில் பங்குபற்றாத JP டுமினி, மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். சகலதுறை வீரராக அணியில் இடம் பிடித்து இருந்த ரயன் மக்லரன், அணியில் இருந்து நீக்கப்படுள்ளார். நல்ல தரமான சகலதுறை வீரர்களுடன் களமிறங்கும் தென் ஆபிரிக்கா அணி, ஒரு சகலதுறை வீரர் கூட இன்றி இம்முறை உலகக்கிண்ண தொடரில் களமிறங்கவுள்ளது. பலமான வேகப்பந்து வீச்சு மூவரும் அணியில் இருக்கும் அதேவேளை, வெர்னொன் பிலான்டரும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
- அணி விபரம்
- AB DE வில்லியர்ஸ்,
- ஹாசிம் அம்லா,
- கைல் அப்போர்ட்,
- பர்ஹான் பெஹைர்டீன்,
- குயின்டன் டி கொக்,
- JP டுமினி, பப் டு பிலேசிஸ்,
- இம்ரான் தாகிர்,
- டேவிட் மில்லர்,
- மோர்னி மோர்க்கல்,
- வேய்ன் பார்னல்,
- ஆரோன் பங்ஹிசோ,
- வேர்ணன் பிலான்டர் -
