Tuesday, January 13, 2015

மிகப்பெரிய இலக்கை துரத்தியடித்து வெற்றியீட்டி சாதனை படைத்த மேற்கிந்திய தீவுகள்

நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி இலக்கை துரத்திப் பிடித்த அணி எனும் பெருமையை பெற்றுக்கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடி தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டூபிளஸிஸ் 56 பந்துகளை மாத்திரம் எதிர் கொண்டு 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.  மில்லர் தனது பங்கிற்கு 47 ஓட்டங்களை விளாசினார்.
வெற்றியிலக்கான 232 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்தில் 19 ஓட்டங்களுக்குள் தமது முதல் விக்கெட்டியை இழந்தாலும் பின்னர் ஜோடி சேர்ந்த சாமுவேல்ஸ் மற்றும் கெய்ல் 71 பந்துகளில் 152 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். இதுவே மேற்கிந்திய அணியின் மிகச் பெரிய இணைப்பட்டமாகும். இதில் கெய்ல் 41  பந்துகளில் 91 ஓட்டங்களையும் சாமுவேல்ஸ் 39 பந்துகளில் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
எனினும் இவர்கள் இருவரதும் இணைப்பாட்டம் பிரிக்கப்பட தென்னாபிரிக்க அணி வெற்றி பெறும் எனும் நிலை உருவாகியது. இருப்பினும் தலைவரின் பொறுப்புணர்ந்து ஆடிய சமி வெறுமனே 7 பந்துகளில் 20 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்து கொண்டார்.
இதன் மூல் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 2 – 0 எனும் கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றிக்கொண்டது. போட்டியின் நாயகனாக கெய்ல் தெரிவு செய்யப்பட்டார்.
Disqus Comments