Friday, January 16, 2015

அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பள அதிகரிப்பு. MY3யின் 1st of 100

மாற்றத்தை நோக்கிய மைத்ரியின் ஆட்சியில்,100 நாட்களில் நடைமுறைக்கு வரும் உத்தேச நலன்சார் வேலைத் திட்டங்களில், அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 10,000 சம்பள உயர்வு வழங்கி, அதன் முதல்படியாக உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 2015 பெப்ருவரி மாத சம்பளத்தை ரூபா 5,000ஆக உயர்த்துதல் என்பது முதன்மை பெறும் முதலாவது மாற்றமாகும்.

இந்த நிலையில், தற்போது, அரச நிர்வாக அமைச்சின் 06/2006இலக்க சுற்றறிக்கையின்படி அரச ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த ஆரம்பச் சம்பளம் 2006.01.01இல் இருந்து 11,730 ரூபாவாகும்.  அரச நிர்வாக அமைச்சின் 18/2012இலக்க சுற்றறிக்கையின்படி ஓய்வூதிய உரித்தற்ற விசேடபடி 2013.09.01இல் இருந்து படிகள் நீங்கலான திரட்டிய சம்பளத்தில் நூற்றுக்கு 20 வீதமாகும்.

அரச நிர்வாக அமைச்சின் 37/2013இலக்க சுற்றறிக்கையின்படி ஆகக்குறைந்த சம்பளம் பெறும் அரச ஊழியர் ஒருவரின் மாதாந்த வாழ்க்கைச் செலவுப்படி 2014.01.01இல் இருந்து 7,800
ரூபாவாகும்.  இதேவேளை, அரச நிர்வாக அமைச்சின் 24/2014இலக்க சுற்றறிக்கைப்படி அனைத்து ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சம்பள ஏற்றங்கள் புதிய சம்பளக் கட்டமைப்பிற்குள் சேர்க்கப்படும் வரை அரசாங்க துறையினரின் அனைத்து ஊழியர்களுக்கும் 2014.11.01இல் இருந்து இடைக்காலக் கொடுப்பனவு 3000 ரூபாவாகும்.

மஹிந்த அரசில், 2014.10.24இல் சமர்ப்பிக்கப்பட்ட 2015க்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின்படி, இந்த இடைக்காலக் கொடுப்பனவு மாத்திரமே தற்போது வழங்கப்பட்டு
வருகின்றது. இந்நிலையில் ஜனவரி 08ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை நோக்கிய மைத்ரி அரசில், அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 10,000 சம்பள உயர்வு வழங்கி, அதன் முதல்படியாக உடன் நடைமுறைக்கு வரும் வகையில், 2015 பெப்ரவரி மாத சம்பளத்தை ரூபா 5,000 ஆக உயர்த்துதல். சகல கொடுப்பனவுகளும், படிகளும் உள்வாங்கப்பட்டு எஞ்சிய தொகையும், அடுத்தடுத்து வரும் சம்பளத்தோடு வழங்கப்படும்.

இதற்கான முன்மொழிவுகள், புதிய அரசில், இம்மாதம் 29ஆம் திகதி புதிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.

ஆகவே, இம்மாதச் சம்பளத்தில், உழைத்த சம்பள உயர்வைத்தவிர, வேறு சம்பள உயர்வுகள் ஏதுமின்றி, 2014 டிசம்பரில் பெற்ற சம்பளம் மாற்றமின்றி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- எம்.ஏ. தாஜகான்
Thanks Sonakar.com
Disqus Comments