(Translated by MS) ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன அவா்களின் 100 நாள் திட்டத்தின் அடிப்படையில் கா்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் என்று வாக்களிப்பட்ட 20000 தொகை அடுத்த மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக சிறுவா் விவகார ராஜாங்க அமைச்சா் ரோசி சேனநாயக்க தெரிவித்தார்.
மேற்படி அறிவிப்பை வெள்ளிக்கிழமை நாரகன்பிடியவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கு பற்றி உரையாற்றும் போதே இதை தெரிவித்தார்.
மேலும் அந்தக் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சா் ரோசி சேனநாயக்க கா்ப்பிணித் தாய்மார்க்களுக்கு மாதாந்தம் 2000 ரூபா வீதம் தலா பத்து மாதங்களுக்கும் சோ்த்து 20000/- போஷாக்கினை முன்னிலைப்படுத்தியே முடிவுவெடுக்கப்பட்டுள்ளதாக தெரவித்தார்.
அத்தோடு குழந்தை பிறக்கும் வரை மட்டுமே இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுமென்றும் கா்ப்பிணிப் பெண்கள் இரும்புச் சக்திக் குறைப்பாடு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவைகளினால் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

MY3யின் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்படி கொடுப்பனவுகள் வழங்கப்படுதற்காக 4000 கிளினிக் நிலையங்களிலிருந்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் மூலமாக தகவல் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த கொடுப்பனவு தொடா்பான விடயங்கள் பிரதேச செயலாளா்களினால் கண்கானிக்கப்படுவதோடு அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தியாக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.