Sunday, February 22, 2015

சுதந்திரத் தினத்தன்று ஜனாதிபதி உட்பட அரச தலைவர்களைக் கொலை செய்ய சதித்திட்டம்

கடந்த சுதந்திர தினத்தன்று இடம்பெற்ற தேசிய சுதந்திர வைபவத்தின் இராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா உட்பட பிரதமர் மற்றும் புதிய அரசாங்கத்தின் தலைவர்களைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் ஒன்று தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்குத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக இன்று வெளியான “த சண்டே டைம்ஸ்” ஆங்கில பத்திரிகையின் பிரசுரமான அரசியல் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலையடுத்து பாதுகாப்பு அமைச்சு உடனடியாகவே ஜனாதிபதிக்கு தகவல் தெரிவித்துள்ளதோடு அத்தினத்தில் அரச தலைவர்களைப் பாதுகாக்கும் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. அன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குண்டு துலைக்காத விஷேட ஆடை அணிந்தே வைபவத்தில் கலந்து கொண்டிருந்துள்ளார்.

1981ம் ஆண்டில் எஹிப்தில் முன்னாள் ஜனாதிபதி அன்வர் சதாதைக் கொலை செய்த பாணியிலேயே இந்தக் கொலையினையும் மேற்கொள்ள சதித்திட்டம் வகுக்கப்பட்டிருந்தமை தொடர்பில்  தகவல் கிடைத்துள்ளதாக த சண்டே டைம்ஸ் ஆங்கிலப் பத்திரிகை அரசியல் கட்டுரையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. எஹிப்தில் அப்போது இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பின் போது இராணுவ வீரர் ஒருவரினால் ஜனாதிபதி அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Disqus Comments