Sunday, February 22, 2015

மஹிந்தவுக்கு எதிராக வழக்குத் தொடர இ.போ.சபை முடிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பிரசார நடவடிக்கைகளுக்கு மக்கள் போக்குவரத்திற்காகப் பெற்றுக் கொண்ட இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்களுக்காக 1425 இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாக தற்போதைய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஏசியன் மிரர் சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலுவையினைச் செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும், அதனைச் செலுத்தத் தவறின் அந்த நிலுவையினைப் பெற்றுக் கொள்வதற்காக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உஎள்ளகப் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பதுளை, பண்டாரவளை, வெலிமடை, ஹிராந்துருகோட்டை மற்றும் மஹியங்கனை ஆகிய இலங்கை போக்குவரத்துச் சபைகளுக்கு 49 புதிய பஸ் வண்டிகளை வழங்கும் பதுளை மத்திய பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
Disqus Comments