(நமது நிருபர்)மக்கள் விடுதலை முன்னணியில் இலக்கு 2020ம் ஆண்டில் நாட்டின் மக்களுக்கு அதிகாரத்தினை வழங்கும் ஒரு அரசை ஏற்படுத்துவதே எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றமும், மக்கள் சவாலும் எனும் தலைப்பில் காலி நகர சைபை மண்டபத்தில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரவித்தார்.
நாட்டிற்கு நிலையான வெற்றியினைப்பெற்றுக் கொடுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் நாட்டை முன்னேற்றும் விரிவான கூட்டணியொன்றின் ஊடாக தொழில் புரியும் மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் 2020ம் ஆண்டளவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலை ஆக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார். அவ்வாறான கூட்டணியானது புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைஞர்கள் மற்றும் வேலை செய்யும் வர்க்கத்தினர்கள் ஆகியோர் உள்ளடங்கியதாக அமைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.