(நமது விஷேட செய்தியாளர்)தமுழு ஓயாவில் தனது தாயுடன் குளிக்கச் சென்ற ஒன்றரை வயதுச் சிறு குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை மாலை தனது தாய் மற்றும் பாட்டியுடன் இவ்வாறு குளிக்கச் சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காணாமல் போண குழந்தையின் தாய் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன் தனது குடும்பத்தாருடன் நேற்று கெக்கிராவ ஹொராபொல பிரதேசத்திற்கு தனது பாட்டன் வீட்டுக்கு வந்திருந்த வேளையிலேயே இவ்வாறு குளிக்கச் சென்று காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.