Friday, February 20, 2015

இந்தியாவின் பிருத்வி – 2 ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் பிருத்வி – 2 ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூருக்கு அருகில், இன்று வெற்றிகரமாக  சோதனை செய்யப்பட்டது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிருத்வி -2 ஏவுகணை, 500-1000 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்கள், வெடிபொருட்க்களைச் சுமந்து, 350 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள தரை இலக்குகளை தாக்கும் திறன் படைத்தது.காலை 9.20 இற்கு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
2003 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்த ஏவுகணையை பயிற்சிக்காக அவ்வப்போது சோதனைச செய்வது வழக்கம். அதன் ஒருபகுதியாகவே இன்று இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய சோதனையின் போது பிருத்வி-2 ஏவுகணை திட்டமிட்டபடி, இலக்கை சரியாக தாக்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடைசியாக பிருத்வி-2 ரக ஏவுகணை, கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி சோதனை செய்யப்பட்டது
Disqus Comments