உலககோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில் குறைந்த ரன்களில் 4 விக்கெட்களை பறிகொடுத்த பட்டியலில் கனடாவை, பாகிஸ்தான் பின்னுக்கு தள்ளியுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடக்கும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீசும், பாகிஸ்தானும் எதிர்கொள்கின்றன. இதனால் தங்களது முதலாவது வெற்றிக்காக இவ்விரு அணிகளும் களம் இறங்கியது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் தங்களது பொறுப்பான ஆட்டத்தினால் அணிக்கு 310 ரன்கள் குவித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 310 ரன்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு 311 ரன்கள் அடித்தால் வெற்றி என வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. பேட்டிங் செய்து விளையாடிவரும் பாகிஸ்தான் பெரிதும் சொதப்பியது. பாகிஸ்தான் எந்தஒரு அணியும் உலககோப்பை போட்டியில் சந்திக்காக ஏமாற்றத்தை சந்தித்தது. பாகிஸ்தான் வெறும் ஒரு ரன் அடித்திருந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையாக, நடையை கட்டினர்.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சம்மாளிக்க முடியாமல் நாசீர் ஜாம்செட் ரன்எதுவும் எடுக்காமலும், அகமது ஒரு ரன்னிலும், யுனிஸ்கான் ரன்எதுவும்
எடுக்காமலும், சோகையில் ரன்எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். பாகிஸ்தான் ஒருரன்னில் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 3.1 ஓவர்களிலே 4 விக்கெட்களை பாகிஸ்தான் இழந்தது. இதன்மூலம் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில் குறைந்த ரன்களில் 4 விக்கெட்களை பறிகொடுத்த பட்டியலில் கனடாவை, பாகிஸ்தான் பின்னுக்கு தள்ளியுள்ளது. குறைந்த ரன்னில் 4 விக்கெட்களை இழந்த அணியாக இதுவரையில் கனடா இருந்தது.
கடந்த 2006 -ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் கனடா 4 ரன்கள், எடுத்திருந்த நிலையில் 4 விக்கெட்களை பறிகொடுத்து பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டது. ஜிம்பாவேக்கு எதிரான போட்டியிலே கனடா இதனைசெய்தது. தற்போது பாகிஸ்தான் அந்நிலையை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் நிலவரம் இப்போது வெளியாகிவிட்டது. பாகிஸ்தான் ரசிகர்கள் வீரர்கள் மீது பெரிதும் ஆத்திரத்தில் உள்ளனர். ஏற்கனவே அணியின் கேட்பன் உல் ஹக் அணியின் பேட்டிங் மிகவும் கவலை அளிப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
