பாரதூரமான நிதி மோசடி குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய பிரிவொன்றை ஸ்தாபிக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைய குறித்த பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கான உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றுபவர்களிடம் இதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
நிதி மற்றும் காசோளை மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதே இந்த பொலிஸ் பிரிவின் நோக்கம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
