புத்தளத்தின் மூத்த இணையத்தள செய்தி ஊடகமான புத்தளம் ஆன்லைன் இன்று அதன் 4 வருட பூர்த்தியை சிறப்பாக கொண்டாடுகிறது.
2011 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட புத்தளம் ஆன்லைன் செய்தி இணையம் இன்று பல்வேறு தடைகளையும் தாண்டி தனது 4 வருட பூர்த்தியை செவ்வனே நிறைவு செய்துள்ளது.
தற்போது தனது பக்க வடிவுகளில் சிறந்த மாற்றங்களை செய்து மிக நேர்த்தியான தோற்றத்துடன் தற்போது அது இணையங்களில் உலாவருகிறது.
புத்தளம் மாவட்டத்திலும் நாடளாவிய ரீதியிலும் புகழ் பூத்த சகோதர ஊடகமான புத்தளம் ஒன்லைன் இணையத்தள சேவைக்கும், சேவை அடிப்படையில் பணியாற்றும் அதன் நிர்வாகிகளுக்கும் ரெட்பானா செய்திகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
- நிர்வாகம்
