Monday, February 16, 2015

இவரை கண்டால் உடன் தகவல் தரவும் - பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள்

கீழுள்ள படத்தில் இருப்பவரை கண்டால் உடனடியாக பொலிஸூக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

இணையத்தளங்களின் ஊடாக பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார்  என்ற குற்றச்சாட்டிலேயே இவர் தேடப்பட்டுவருகின்றார். குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே இந்த சந்தேகநபரை கைதுசெய்துசெய்வதற்கு தேடிவருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், அதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர். 

திஸாநாயக்க முதியன்செலாகே சுஜித் நிலந்த என்ற இந்த சந்தேகநபர் வதிவிடத்திலிருந்து தப்பியோடியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலக்கம்161/12, பன்சலவத்தை, களுகல்பிட்டிய,ஸ்பிரிங்வெலிவீதி, பதுளை என்ற முகவரியிலேயே இவர் வசித்துள்ளார். 

சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் 011-2422176 அல்லது 011-2326979 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸ் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 
Disqus Comments