Wednesday, February 18, 2015

விமலின் மனைவியை கைது செய்யாவிட்டால் 5000 பேருடன் வீதிக்கு இறங்குவேன்: புத்ததாஸ

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவியை பொலிஸார் கைது செய்யாவிட்டால் ஐயாயிரம் மக்களுடன் வீதிக்கு இறங்குவேன் என கடுவெல நகர முதல்வர் ஜீ.எச்.புத்ததாஸ தெரிவித்துள்ளார்.

கடுவெல முதல்வர் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவன்சவின் மனைவி சட்டரீதியாக தண்டிக்கப்படவில்லை என்றால் நான் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்களை அழைத்துக்கொண்டு வீதிக்கு இறங்குவேன் எனவும் நாட்டின் சகல மக்களுக்கும் ஒரே மாதிரியான நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுவெல நகர முதல்வர் என்ற ரீதியில் நானும் பொது மக்களும் இந்த நாடகத்தை பொறுத்தது போதும். நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து நல்லாட்சியை மேம்படுத்துங்கள் என்று ஜீ.எச்.புத்ததாஸ தெரிவித்துள்ளார்.
Disqus Comments