Wednesday, February 18, 2015

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரியுள்ளார் சல்மான் பட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 2010 ஆம் ஆண்டு  இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது.
இதன்போது, சல்மான் பட் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது.
கடைசி டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள்  சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
சூதட்டத்தில் சிக்கிய வீரர்களிடம் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் விசாரணை நடத்தினர். இதில் அம்மூவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து, அவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐ.சி.சி.)  5 ஆண்டுகள் விளையாடுவதற்குத் தடைவிதித்தது. மேலும், இங்கிலாந்தில் இவர்களுக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சல்மான் பட் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷார்யார் கானுடன் நடந்த கலந்துரையாடலில் சல்மான் பட் சூதட்டம் நடைபெற்றதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும்,  தம் நாட்டை தலைகுனியச்செய்த இந்த சூதாட்ட செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.
ஏற்கனவே 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக தனிஷ் கனேரியாவிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments