நேற்று நுகேகொடையில் நடைபெற்ற மகிந்தவுடன் நாட்டைக் வெல்வோம் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் எத்தனை போ் கலந்து கொண்டா்கள் என்று இதுவரைய சமூக வலைத் தளங்களில் பல தா்க்கங்கள் நடைபெற்று வருகின்றது.
5000 போ் ஒன்று சோ்ந்தால் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடா்ந்து வாக்குவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
கூட்டத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச ”இந்தக் கூட்டத்தில் சுமார் ஐந்து இலட்சம் போ் உள்ளனா் என்று தெரிவித்ததைத் தொடா்ந்து அவா்களின் ஆதரவாளா்களினால் 5 இலட்சம் போ் நுகேகொடையில் நிறைந்தனா்” என்ற தொனியில் பிரச்சாரங்களும் காரசாரமாக செய்யப்பட்டு வருகின்றன.
உண்மையில் நேற்றைய கூட்டத்தில் 5 இலட்சம் போ் கலந்து கொண்டார்களா? எத்தனை போ் கலந்து கொண்டனா்? இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவா்களின் எண்ணிக்கையை ஆதாரத்துடன் பார்ப்போம்.
சென்ற 14ம் திகதி இலங்கைக்கு வருகை வந் பாப்பரசரின் சமய நிகழ்ச்சிக்கு காலி முகத்திடலில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற திறந்த வெளியின் அளவு சுமார் 82 789 சதுர மீட்டா்கள். கண்கெடுப்பின் படி 252 சதுர மீட்டா்கள் கொண்ட இடத்தில் சுமார் 1260 போ் (நின்ற நிலையில்) இருக்க முடியும்.
அதன்படி 82789 சதுர மீட்டரில் நான் இலட்சம் மக்கள் இருக்கலாம். (நான்கு இலட்சம் போ் கலந்து கொண்டதாக உத்தியோக பூா்வமாக அறிவிக்கப்பட்டது.
நேற்று நுகேகொடையில் நடைபெற்ற மகிந்தவுடன் நாட்டை வெல்வோம். மகிந்த ஆதரவு கூட்டம் நடைபெற்ற இடத்தின் மொத்த பரப்பளவு சுமார் 6385 சதுர மீட்டா்களாகும்.
அதன்படி 252 சதுர மீட்டா்கள் கொண்ட இடத்தில் சுமார் 1260 போ் என்ற கணக்கொடுப்பின் படி (6385/252x1260=31952) அங்கு இருக்கக் கூடிய மக்கள் தொகை 31925 மட்டுமே.
அதே வேளை குறிப்பிட்ட இடத்தில் உள்ள கட்டிடங்களில் இருந்தும் மக்களுடன் நெருக்கமாக இருந்த நிலையில் இருந்தவா்கள் உட்பட அனைவரையும் சோ்த்துப் பார்க்கும் போது (இரு மடங்கு என்றாலும்) அதிகப்படியாக சுமார் 63850 பேரே நேற்று கலந்து கொண்டனா் என்பது தெளிவாகின்றது.
