Thursday, February 19, 2015

தனியாருக்கு 15 - 35 வீத சம்பள அதிகரிப்பு, சம்பந்தப்பட்ட தரப்புகள் இணக்கம்

சம்பள நிர்ணய சபையினூடாக தனியார் துறையினரின் சம்பளத்தை 15 முதல் 35 வீதங்களால் அதிகரிப்பதற்கு தொழில் தருநர்களும் ஊழியர் சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

தனியார் துறையினருக்கு சம்பளம் அதிகரிக்கப்படுவது தொடர்பாக  நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சங்கங்கள், தொழில் வழங்குநர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியபோது அவர்கள் சம்பள அதிகரிப்பு விடயத்தை சம்பள நிர்ணய சபையினூடாக மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தனியார் துறையினரின் அடிப்படைச் சம்பளத்தை குறைந்தது 10 ஆயிரம் ரூபாவாக இருக்கும் வகையில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை அந்தந்த நிறுவனங்களின் இலாபத்துக்கு இணங்க ஊழியர்களின் சம்பளத்தை 15 வீதத்திலிருந்து 35 வீதம் வரை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

Disqus Comments