துருக்கியை சேர்ந்த பெண் ஒருவர் தன் 10 வயது மகனை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் தலைநகர் அங்காராவில்(Ankara) வசிக்கும் நுரே சகான்(Nuray Sacan Age-37) என்ற பெண்மணி தன் மகனுக்கு(10) காதுகள் பெரிதாய் இருப்பதால் மிகுந்த கவலையடைந்துள்ளார்.
எனவே தன் மகனை மருத்துவர்களிடம் அழைத்து சென்ற அவர், அவர்களின் ஆலோசனை படி அறுவை சிகிச்சைக்கும் சம்மதித்துள்ளார்.
ஆனால் காதுகள் இன்னும் பெரிதானதை போல் தோற்றமளித்ததால் மனம் நொந்த அவர், மகனை கொலை செய்ய தீர்மானித்துள்ளார்.
இதனையடுத்து கழிவறைக்குள் தன் மகனை அழைத்து சென்ற அவர், அவனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அங்கிருந்து காரில் விரைவாக தப்பி ஓடியுள்ளார்.
எனினும் விபத்து ஒன்றில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது மகனின் சடலத்தை மீட்ட பொலிசார், இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் கூறியதாவது, ராட்சத காதுகளால் என் மகன் மிகவும் அசிங்கமான தோற்றத்தை கொண்டிருந்தான் என்றும் வருங்காலத்தில் அனைவரும் அவனை கேலி செய்தால் சங்கடப்படுவான் என்பதற்காகவே நான் கருணைக் கொலை செய்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.