Saturday, February 21, 2015

நுவரெலியா உலக முடிவில் வீழ்ந்து மரத்தில் தொங்கியிருந்த நெதா்லாந்து உயிருடன் மீட்பு

நுவரெலியா, ஓட்டன் சமவெளியில் அமைந்துள்ள உலகமுடிவில் விழுந்து காணாமல் போனதாக கூறப்படும் சீனப்பிரஜை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்தனர். இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்துள்ள இந்த சீன பிரஜை இவ்வாறு இன்று காலை மேலும் சிலருடன் உலகமுடிவை பார்வையிடுவதற்காக சென்றிருந்த போதே அங்கிருந்து கீழே விழுந்துள்ளார்.

இது தொடர்பில் அவருடன் சென்ற மற்றையவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் தியதலாவ இராணுவ முகாமிலிருந்து பெல 212 ரக ஹெலிகொப்டர் ஒன்றினை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பொது குறித்த சீனப் பிரஜை மரமொன்றில் அகப்பட்டிருந்த நிலையில் விமானப்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

விமானப்படையினரின் மீடக்கப்பட்டவர் தற்போது அம்புலன்ஸ் மூலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுவரெலியா, ஹோட்டன் சமவெளியில் அமைந்துள்ள இந்த உலகமுடிவில் விழுந்து உயிருடன் மீட்கப்பட்ட முதலாவது நபர் இவராவார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
Disqus Comments