இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டியை பொதுமக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.
உலகின் இயற்கைக்கு மாறான நிகழ்வுகள்,எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே, அமைகின்றது. அந்த வகையில் கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள, இல்லமொன்றில் வளர்க்கப்பட்ட பசு ஒன்று இரண்டு தலைகளுடனான பசு கன்றினை ஈன்றுள்ளது.
சிதம்பரபிள்ளை வீரகத்தி என்பவரால் வளர்க்கப்பட்டு வந்த பசுவே இவ்வாறு இரண்டு தலைகளுடனான கன்றினை ஈன்றுள்ளது.
அந்த கன்று ஆரோக்கியமாக காணப்படுவதுடன், கன்றினை ஈன்ற பசுவும் ஆரோக்கியமாக காணப்படுவதாக அதன் உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மக்கள், அந்த பசுவினையும், கன்றினையும் வியந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
