Saturday, February 21, 2015

கல்பிட்டி மீனவர்கள் ஆர்ப்பாட்டம். வீதிப் போக்குவரத்து சில மணி நேரம் பாதிப்பு

(எம்.ஏ.ஏ.காசிம்)

சட்ட விரோத மீன் பிடி வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதின் காரணமாக மீனவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதாக மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். கல்பிட்டி-பாலாவி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டி பகுதியிலேயே இவ்வாறு மீன்வர்கள் இன்று நண்பகல் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக இவ்வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டதுடன் கல்பிட்டி பொலிஸார் தடைப்பட்டிருந்த போக்குவரத்தினை சீா செய்து வழமை நிலையை ஏற்படுத்தினர்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வந்து இவ்வாறான சட்ட விரோத வலைகளை பயன்படுத்துவதின் காரணமாக ஏனைய மீனவர்களுக்கு கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட முடியவில்லை எனவும், தற்கு ஒரு நிரத்தர தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்து இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
Disqus Comments