இன்று சிலர் கூறுகிறார்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டுமாம். நல்ல விடயம். பிரதமராக்குங்கள் என்று நான் கூறுகின்றேன். இம்முறை 64 இலட்சம் மக்கள் என்னைப் பிரதமராக்குமாறு கூறியிருக்கின்றார்கள். நானும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றாக ஒரு தடவைதான் ஜனாதித் தேர்தலில் போட்டியிட்டோம். அவர் பிரபாகரனின் தயவினால் வெற்றி பெற்றார். இன்று அவர் பெரிதாகப் பேசுகிறார். இன்று அவரை வரச் சொல்லுங்கள். எனக்குப் பிரச்சினையில்லை. அவர் என்ன கட்சியில் வரப் போகிறார்? அவருக்கு கட்சி ஒன்றில்லை. வெத்திலையும், கதிரையும், கையும் இன்று எமது ஜனாதிபதி மைத்திரிபால வசமே உள்ளது. இந்நிலையில் அவர் கரத்தைச் சக்கரச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து முடியுமானால் வெற்றியீட்டிக் காட்டுமாறும் இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.
புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட்டால் அவருடைய வாக்குப்பலத்தை 50 ஆயிரமாக குறைத்துக் காட்டுவதாகவும் தெரிவித்த பிரதமர், தற்போது இந்நாட்டின் அரசியல் கலாசாரம் தலைகீழாக மாறியுள்ளதாகவும், மக்களுக்குச் சலுகைகளை வழங்க எமது நூறு நாள் போதுமானது எனவும் தெரிவித்தார்.