Friday, February 27, 2015

திவிநெகும திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு

ரூஸி சனூன்  புத்தளம்

திவிநெகும அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப்பொருட்களை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வியாழக்கிழமை (26) மாலை புத்தளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.2014 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிராமத்துக்கு 03 இலட்சம் எனும் “வாழ்வின் எழுச்சி” அபிவிருத்தி திட்டத்தின் வாழ்வாதார உதவிகளே பயனாளிகளுக்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.
 
முன்பள்ளி ஆசிரியைகள்,
விதவைகள், 
குறைந்த வருமானம் பெறுபவர்கள், 
சாதாரண வருமானம் பெறுபவர்கள் 
மற்றும் சமூர்த்தி உதவி பெறுபவர்களுக்கு 
 
தண்ணீர் தாங்கிகள், 
தையல் இயந்திரங்கள், 
கேஸ் சிலிண்டர்கள், 
அடுப்புகள் மற்றும் 
கால்நடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
 புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மின்சக்தி, எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார கலந்து கொண்டார். புத்தளம் நகர சபை உறுப்பினர் வாசல பண்டார உள்ளிட்ட திவிநெகும அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
நன்றி - புத்தளம் ஆன்லைன்.













Disqus Comments