Friday, February 27, 2015

அரசாங்கத்தினுள் டீல் காரர்கள் உள்ளனர். நாம் யாரையும் தப்பிக்க விடமாட்டோம் - ராஜித

கடந்த காலங்­களில் நாட்டில் பாரி­ய­ளவில் ஊழல் செய்­த­வர்­களை பாது­காக்கும் செயற்­பாட்டில் அர­சாங்­கத்­துக்குள் டீல் காரர்கள் செயற்­ப­டு­கின்­ற­னரா? என்ற சந்­தேகம் எனக்கும் இருக்­கின்­றது. விசா­ரணை செயற்­பா­டுகள் ஏன் தாம­த­ம­டை­கின்­றன என்­பது குறித்து நானும் குழப்­பத்தில் இருக்­கின்றேன் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

எவ்­வா­றெ­னினும் கடந்த காலங்­களில் ஊழல் செய்­த­வர்­களை சட்­டத்தின் முன்­கொண்­டு­வர அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும். மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை இந்த அர­சாங்கம் நிறை­வேற்றும். அதற்கு ஊட­கங்­களும் உத­வ­வேண்டும். இந்த அர­சாங்­கத்தை அமைக்க சிவில் அமைப்­புக்­களும் பங்­க­ளிப்பு செய்­துள்­ளன என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்ட அமைச்­ச­ரிடம் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

போதைப்­பொருள் உள்­ளிட்ட ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் அர­சாங்­கத்தின் விசா­ர­ணைகள் தாம­த­ம­டை­வ­தாக மக்கள் குறை­கூ­று­கின்­ற­னரே என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதலளித்த அமைச்சர்,
அந்த பிரச்­சினை எனக்கும் உள்­ளது. நாட்டில் அர­சாங்கம் மாறி­னாலும் அரச நிறு­வ­னங்கள் மாற­வில்லை. ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் போதைப் பொருள் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்த விசா­ர­ணைகள் தாம­த­ம­டை­கின்­றமை எனக்கும் பாரிய சிக்­க­லா­கவே உள்­ளது. ஆனால் விட­மாட்டோம். இவற்றை முன்­கொண்டு செல்வோம். தற்­போது நிலைமை மாறு­கின்­றது. இந்த விட­யங்­களை நானே எழுப்­புவேன். ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளா­கிய நீங்கள் என்­னிடம் எழுப்­பிய கேள்­வி­களை நான் உரிய இடத்தில் எழுப்­புவேன்.

நாம் மக்களுக்கு வழங்கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றுவோம். இது அர­சியல் கட்­சி­க­ளினால் மடடும் அமைக்­கப்­பட்ட அர­சாங்கம் அல்ல. சிவில் அமைப்­புக்­களும் இந்த அர­சாங்­கத்தை அமைக்க பங்­க­ளிப்பு செய்­தன.

மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்ட அவ­ரிடம் வரப்­பி­ர­சா­தங்­களை பெற்ற அதி­கா­ரிகள் இன்னும் உள்­ளனர். அவ்­வா­றான சிலர் இழுக்­கின்­றனர் என்­பது தெரி­கின்­றது. அவர்கள் தொடர்­பான விப­ரங்­களை விரைவில் நானே வெளி­யி­டுவேன். ஆனால் நாங்கள் பொறுப்­புக்­கூ­றுவோம். யாரும் இதனை செய்­யா­விட்டால் நான் அவர்­களை வெளிப்­ப­டுத்­துவேன். வெலே சுதா வழங்­கிய பணம் தற்­போது கட­னாக பெற­ப­பட்­ட­தாக கூறப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு பல விட­யங்கள் உள்­ளன.

சில விட­யங்­களில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஒருவர் தலை­யிட்டு செயற்­பட்­டுள்ளார். இதனை நானும் அனுர குமா­ர­தி­சா­நா­யக்­கவும் சம்­பிக்க ரண­வக்­கவும் தேசிய நிறை­வேற்று சபையில் எழுப்­பினோம். அவன் கார்ட் நிறு­வன உரி­மை­யா­ள­ருக்கு பிணை கிடைத்­துள்­ளது. தவறு செய்த யாரையும் விட­மாட்டோம். அடுத்த தேர்­த­லுக்கு முன்னர் சட்­டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்­துவோம். தண்­டனை பெற்­றுக்­கொ­டுப்போம்.
Disqus Comments