Friday, February 27, 2015

வெள்ளை வேன் கடத்தல்களின் விபரங்கள் எனக்குத் தெரியும் - முன்னாள் பொலிஸ் பேச்சாளர்

நாட்டில் இருந்த வெள்ளை வேன் கலா­சாரம் தொடர்பில் தான் அறிந்­தி­ருந்­திருந்தேன். முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ மற்றும் அவ­ரது அமைச்சின் கீழ் செயற்­பட்ட ஆயுதக் குழுக்­களின் கொலை அச்­சு­றுத்தல் விடுக்கப்பட்டதன் கார­ண­மா­கவே நான் நாட்டை விட்டு வெளி­யேறி அவுஸ்­தி­ரே­லியா சென்றேன். அப்­போது தனது மகள், மனை­வியின் நிலைமையை எண்ணி அந்த முடிவை எடுத்தேன்  என முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ரு­மான பிர­சாந்த ஜயக்­கொடி தெரி­வித்தார்.

வெள்ளை வேன் கடத்­தல்­களின் பின்னால் இருந்த முக்­கிய இரா­ணுவ அதி­கா­ரிகள் தொடர்­பில என்­னிடம் ஆதாரம் உள்­ளது. அக்­கா­லப்­ப­கு­தியில் கருணா அம்மான் உள்­ளிட்ட ஆயுதக் குழுக்­களின் நட­மாட்டம் காணப்­பட்­டது. வெள்ளை வேன் கலா­சரம் தொடர்பில் விசா­ரணை ஒன்று நடத்­தப்­பட்டால் நான் சாட்­சி­ய­ம­ளிக்க தயார் எனவும் பிர­சாந்த ஜய­கொடி மேலும் குறிப்­பிட்டார்.

அத்­துடன் நான் உயிர் அச்­சு­றுத்­த­லுக்கு முகம் கொடுத்து நாட்டை விட்டு வெளி­யே­றி­யமை தொடர்பில் நீதி­யான விசா­ரணை ஒன்று நடத்­தப்­பட்டு தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படல் வேண்டும். தொடர்ந்தும் பொலிஸ் சேவையில் இணைந்து செயற்­பட நான் விரும்­பு­கின்றேன் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஒரு வரு­டமும் ஏழு மாதங்­களின் பின்னர் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இருந்து நேற்று பிற்­பகல் 12.30 மணி­ய­ளவில் நாடு திரும்­பிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும் இரத்­தி­ன­புரி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ரு­மான பிர­சாந்த ஜய­கொடி நேற்று மாலை கொழும்பு கல­தாரி ஹோட்­டலில் செய்­தி­யாளர் மாநாடு ஒன்றை நடத்­தினார். அதி­லேயே அவர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார்.
Disqus Comments