நுகேகொடையில் புதன்கிழமை நடத்தப்பட்ட கூட்டம் வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அக்கூட்டம் வெற்றிலையின் பலத்தை பிரதிபலித்திருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தனது கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் தனது கடமைகளை இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொருலாளராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.பி நாவின்னவும் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
நுகேகொடையில் புதன்கிழமை நடத்தப்பட்ட கூட்டம் வெற்றியளித்துள்ளது. அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த கூட்டத்துக்கு செல்வது தொடர்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவேண்டியிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
