Sunday, February 22, 2015

"கோத்தபாயவின் ஆதிக்கம் இனிமேல் கிடையாது'' - முஜீபுா் ரஹ்மான்

கொழும்பு வாழ் மக்­க­ளுக்கு இனிமேல் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வி­னு­டைய ஆதிக்கம் கிடை­யாது என மேல் மாகாண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.
மேலும் கொழும்பு வாழ் மக்­களின் உரி­மையை பெற்றுக் கொள்ள ஐக்­கிய தேசிய கட்­சியின் யுகத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.
தெமட்­ட­கொடை பொதுச்­சந்தை கட்­டட தொகு­தியை நேற்று திறந்து வைத்து உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், கொழும்பு வாழ் மக்­களின் உரி­மையை வென்­றெ­டுப்­ப­தற்கு குரல் கொடுத்து வந்­துள்ளோம். மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியின் போது கொழும்பு வாழ் மக்கள் பல இன்­னல்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தனர். வீடு­கள; உடைக்­கப்­பட்­டன. பல­வந்­த­மாக காணிகள் பறிக்­கப்­பட்­டன.
இது தொடர்பில் பல தட­வைகள் நீதி­மன்ற வாசலில் வீற்­றி­ருந்தோம். எனினும் ராஜ­பக்ஷ குடும்ப ஆட்­சியில் கொழும்பு வாழ் மக்கள் அச்­சத்­து­ட­னேயே வாழ்ந்து வந்­தனர். எனினும் தற்­போது ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது.
ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது நாட­ளா­விய ரீதியில் தோல்வி காணும் போது கொழும்பு மாந­கரில் ஐ.தே.க. வாக்கு வங்­கியை எம்மால் பாது­காக்க முடிந்­தது.எனவே கொழும்பு வாழ் மக்­க­ளுக்கு ஐக்­கிய தேசிய கட்சி நன்றி கடன்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் கொழும்பு நகரில் மக்களின் வாழ்க்கையில் இனிமேல் கோத்தபாய ராஜ க் ஷவின் ஆதிக்கம் இருக்காது என்றார்.
Disqus Comments