மார்ச் 31ம் திகதி நீதிமன்றில் ஆஜராவதற்கான அழைப்பாணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அவசியமற்ற வகையில் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தியதாக அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை வழக்கிலேயே இவ்வழைப்பாணை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரி பிரதிநிதி துமிந்த நாகமுவவின் மனு அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதோடு மஹிந்த ராஜபக்ச, தேர்தல் ஆணையாளர் உட்பட ஏழு பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளமையும் அனைவரையும் நீதிமன்றில் ஆஜராவதற்கான அழைப்பை விடுக்க பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், ஈவா வனசுந்தர, பிரியசாத் டெப் ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழு தீர்மானித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
