புதுடெல்லி,
உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றில் வெற்றியை தக்கவைத்துக் கொண்டது.
இதையடுத்து, நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த போட்டியில் இந்தியா வெல்வதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தாலும், பிரதமர் மோடி நேற்று தெரிவித்த வாழ்தது அனைவரையும் கவர்ந்தது. ஏனெனில் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரரின் தனித்திறமையையும் சுட்டிக்காட்டி வாழ்த்துக்களை தெரிவித்தது அனைவரின் புருவத்தையும் உயரச் செய்தது.
உலகக்கோப்பை வரலாற்றில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். அதில், 'இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! இந்திய நன்றாக விளையாடினார்கள். இந்த வெற்றியை நாங்கள் அனைவரும் பெருமையாக கருதுகிறோம்.' என்று தெரிவித்துள்ளார்.
