இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண வீடுகளில் டி.வி. முன் ரசிகர்கள் முடங்கியதால், சென்னையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன
.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று அடிலெய்டில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த லீக் ஆட்டத்தில் (‘பி’ பிரிவு) பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் கோதாவில் இறங்கியுள்ளன. காலை இந்திய நேரப்படி 9 மணிக்கு இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடையே கிரிக்கெட் ஜூரம் பற்றி உள்ளது. கிட்டத்தட்ட உலகக்கோப்பை போட்டியின் இறுதி போட்டியை போன்று மக்கள் மிகவும் ரசித்து பார்க்கும் போட்டி என்பதால், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை காண மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.
அதே போன்று, சென்னையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் இந்த போட்டியை அவரவர் வீடுகளில் உள்ள டி.வி.க்களின் முன் அமர்ந்து மிகவும் ஆர்வமாக கண்டு கழித்தனர். மேலும் வியாபாரம் மற்றும் தொழில் காரணமாக வெளியில் சென்றிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் டி.வி.க்களில் இந்த கிரிக்கெட் போட்டியை கண்டு கழித்தனர். இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண வீடுகளில் டி.வி. முன் ரசிகர்கள் முடங்கியதால், சென்னையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
